சினிமாட்டோகிரபி

in துண்டிலக்கியம்

நன்றி: Criterion.com

நன்றி: Criterion

எனது 35 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா பார்க்கும் அனுபவத்தில் சமீபத்தில் ஒரு விசயத்தைக் கவனித்தேன். ஒரு காட்சியில் ஒரு சம்பவம் நிகழ்ந்தால் உடனே சில கதாபாத்திரங்களின் முகத்தை/முகங்களைக் காட்டுகிறார்கள். ‘இதற்கு இவன் எப்படி எதிர்வினையாற்றுகிறான் பார்’ என்று நமக்கு ஊட்டி விடுவது போல.

“அதனைக் கேட்டு அவளின் முகம் சிவந்தது” என்று எழுத்தில் வர்ணிப்பது வேறு. அது ஒரு கட்டாயம். சினிமா என்பது வேறு வித ஊடகம். ‘இதைப் பார்’ என எதையும் குச்சியால் தொட்டுக் காட்டிப் பார்வையாளனின் அறிவையும் பார்வைத் திறனையும் அவமதிக்கக் கூடாது. அவனே பார்த்துக்கொள்வான்.

நான் சினிமா எடுத்தால் என்னுடைய படத்தில் எல்லா ஃப்ரேம்களும் Last Supper ஓவியம் போல் இருக்கும். எந்த நிகழ்வுக்கு எந்தக் கதாபாத்திரம் எப்படி ரியாக்டு கொடுக்கிறது என்பதை எனது கான்வாஸில் தேடிப் பார்க்கலாம். புத்திசாலிப் பார்வையாளர்களுக்குப் படம் எடுப்பது இப்படித்தான்.

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar