சிறுகதை யோசனை

in துண்டிலக்கியம்

ஒருவர் வேகமாக மோட்டார்பைக்கில் விரைவதைப் பார்த்து இன்னொருவர் தமது பைக்கைக் கிளப்பி அவரைத் துரத்திச் செல்கிறார். காடு மேடு எல்லாம் கடந்து சென்ற பின்பு ஒருவழியாக இன்னொருவர் ஒருவரை முந்திச் சென்று வழிமறிக்கிறார். ஒருவரின் ஹெட்லைட்டைக் காட்டி “லைட் எரியுது’ என்று சொல்லிவிட்டு வந்த வழியே திரும்பிச் செல்கிறார். அவர் மீது வானிலிருந்து தேவர்கள் பூமாரி பொழிகிறார்கள். சாலையெல்லாம் பூக்கள், பிறக்கும்போதே தரையில் மலர்ந்தவை போல.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar