ஓர் சருகு

in கவிதை

பூக்கள் மறையும் வேளையில்
பூச்சிகள் ஒலித்திடும் நேரத்தில்
சருகுகள் விரவிய மட்பாதையில்
உனக்கென்று எடுத்துவைத்த
ஓர் சருகை நொறுக்காமல்
உள்ளங்கையில் அடக்கிப்
பாதை விளிம்புகள் கூம்பிடும் புள்ளியை
வெறிக்கிறான் ஆளில்லாக் கிழவன்.

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar