மழைக்குட்டைகள்

in கவிதை

அரைகுறையாக உள்ளது நிலவு
புழுதியாய்ப் படரும் காற்று குளிர்கிறது
அனாமத்து ஒளிகளைப் பிரதிபலிக்கின்றன
மழைக்குட்டைகள்; தெருவுக்குக் குறுக்கே
எண்ணி ஒரே ஒரு நாய்
எலும்புந்தோலுமாய் ஓடுகிறது
நிலையாப் பிறாண்டல்களை
மழைக்குட்டைகளில் பதித்து.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar