குறுங்கவிதைகள்

in கவிதை

பூக்களைப் பறிக்காதீர்கள்
என்கிறது பலகை
பூக்களைப் பற்றி என்னோடு பேசிய
பலகையே, இந்தா முத்தம்.

*

துருத்தும் வேர்களிடைப்
பள்ளத்திற்குள் இலை ஒன்று
உதிர்ந்து விழுகிறது.

*

நீரில் பிரதிபலிக்கிறேன்
நீர் என்னைப் பிரதிபலிக்கிறது
நீர் என்னைப் பிரதிபலிக்கிறீர்.

*

வார்த்தைகள் செத்துவிட்டன
நாம்தான் கொன்றோம்
அதைக் கொண்டாடுகிறோம்
வார்த்தைகளைக் கொண்டு.

*
உலகம் எவ்வளவு மிகச் சிறிது என்றால்
ஒரு தீப்பெட்டி லிஃப்ட்டில் நூறு பேருடன்
சிக்கிக்கொண்டது போலிருக்கிறது.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar