மூன்று கவிதைகள்

in கவிதை

அதிகாலைகள் அழகாய் இருக்கக் காரணம்
மனிதர்கள் அதிகம் கண்ணில் படாமை.

*

நெடுநாள் கழித்துப் பார்க்கும் நண்பன்
இளைத்துத் தெரிவதேனோ?
காலமும் அளவும் குறித்த பிரக்ஞையின்
வளர்சிதை மாற்றந்தானோ?

*

ராட்சத நீர்த்துளி மூட்டம் காட்டிக்
காதை அடைக்கும்
பலத்த ஆர்ப்பாட்டத்துடன்
அருவி கொட்டுகிறது
என் வீட்டுக் குழாய்
போதும் எனக்கு.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar