கிராக்கு

in துண்டிலக்கியம்

தெருவில் நடந்து போகும்போது ஏதோ ஒரு நினைவுக்குள் யாருக்கோ பதிலளித்து ‘ஆம்’ என்று நிஜத்தில் ஆமோதித்துத் தலையாட்டுகிறேன். பின்பு உலகம் கவனித்திருக்கக்கூடும் என்று உணர்ந்து வீடு வரும் வரை தலையை இடமும் வலமும் ஆட்டியபடியே நடக்கிறேன் – அதாவது நான் இயல்பாகவே அப்படித்தான், நான் திடீரென்று விநோதமாக எதுவும் செய்துவிடவில்லை, என்னை கிராக்கு எனக் கருதி ஒதுக்கிவைத்துவிடாதீர்கள் என்பது போல.

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar