செக்சுவல்

in துண்டிலக்கியம்

சமீபத்தில் அறிமுகமான ஒரு புதிய பதிப்பாளரோடு நானும் லபக்குதாசும் பேசிக்கொண்டிருந்தோம்.

“நீங்க வெஜ்ஜா நான்வெஜ்ஜா சார்?” என்றார் பதிப்பாளர் என்னிடம் என் ஜாதியைக் கண்டுபிடிக்க.

லபக்குதாஸ் முந்திக்கொண்டு, “அவர் பைசெக்சுவல். ரெண்டும் சாப்புடுவாரு” என்றார்.

நாடிய தகவல் கிடைக்காததில் பதிப்பாளர் ஏமாற்றமடைந்தது போல் தர்மசங்கடமாகப் புன்னகைத்தார். பிறகு லபக்குதாசிடம் “நீங்க சார்? நீங்களும் பைசெக்சுவலா?” என்றார்.

இம்முறை நான் குறுக்கிட்டு, “அவர் ஹோமோசெக்சுவல். பியூர் வெஜிட்டேரியன்” என்றேன்.

பதிப்பாளர்  எந்தக் கருத்தும் வெளிப்படாத வகையில் பலமாகத் தலையாட்டினார்.

“வெள்ளிக்கெழம தவிர. மிசஸ்-க்குப் புடிக்காது” என்றார் லபக்குதாஸ்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar