கிளைமாக்ஸ்!

in துண்டிலக்கியம்

நான் இப்போது ஒர்க் பண்ணிக்கொண்டிருக்கும் ஃபிலிம் புராஜெக்ட் ஒரு பரபர விறுவிறு திரில்லர் திரிவேதி. திரைக்கதை-வசனம் எழுதும் நான், படத்தின் கிளைமாக்சில் ஓர் எதிர்பாராத திருப்பத்தை வைத்தேன். தொடர்கொலை செய்யும் போலீஸ் அதிகாரியான வில்லனைக் கடைசியில் அவனுடைய மாளிகையை முற்றுகையிட்டுப் பிடித்துவிடுகிறார்கள். வில்லன் தற்கொலை செய்துகொள்ள சர்வீஸ் ரிவால்வரை எடுக்கிறான். படத்தைப் பார்ப்பவர்களில் அந்த நடிகரின் ரசிகர்கள் “நோ!” என்று கத்த, வில்லன் தன் எதிரே இருக்கும் கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தைச் சுடுகிறான், கண்ணாடித் துண்டுகளாக நொறுங்கி விழுந்து சாகிறான். கண்ணாடிக்கு ஒன்றும் ஆகவில்லை. இயக்குநர் இந்தப் புதுமையை நிராகரித்துவிட்டார். படத்துக்கு கிளைமாக்ஸ் இருக்கட்டும், ஆனால் இந்த கிளைமாக்ஸ் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar