விளையாட்டுப் பிள்ளை

in துண்டிலக்கியம்

நான் எந்தப் பெண்ணையும் தனிப்பட்ட முறையிலோ பகிரங்கமாகவோ புகழ்ந்தது கிடையாது. அவர்கள் முதுகுக்குப் பின்னால் பாராட்டியது கிடையாது. மனதில் நிறைய இருக்கிறது. அன்பு, அக்கறை, மரியாதை, பிரமிப்பு, மயக்கம், பயம், போற்றுதல், ஏக்கம் எல்லாம் இருக்கிறது. ஆனால் நான் அவற்றைத் தவறான ஆளிடம் சொல்லி என் மனைவி காதுக்குப் போனால் அவரின் கற்பனையில் நான் ஒரே இரவில் “பிளேபாய்” ஆகிவிடுவேன். அதுவும் அந்த இரவில் ஒன்றுமே நடந்திருக்காது. அது எரிச்சலான விசயம்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar