பரிசுப் புன்னகை

in கவிதை

“நீ யாரையோ காதலிப்பதாகப்
பேசிக்கொள்கிறார்கள்.
நான்தானே அது?” என்கிறேன்.
பதில் சொல்லாமல் ஒரு
புன்னகையைப் பரிசாகக்
கொடுத்துவிட்டுப் போகிறாய்
எங்கே வைப்பேன் அதை?
அடுத்த முறை பணமாகக் கொடு.

Tags: , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar