சமரசங்கள்

in துண்டிலக்கியம்

எதிர்த் தரப்பு உறவினர் ஒருவருக்கு நான் திரைக்கதை-வசனம் எழுதிய படம் ஒன்றைப் போட்டுக் காட்டினேன். கருத்துச் சொல்லாமல் பார்த்தார். படம் முடிந்ததும், “தப்பா நினைச்சிக்காதீங்க சார், எனக்கென்னவோ படம் திருப்தியா இல்ல. கதை, டயலாக் எதுவுமே மனசுல ஒட்டல” என்றார். நான் ஆமாம் போலத் தலையாட்டினேன். ‘வணிக சினிமால இறங்கிட்டா பெருவர்த்தகத்துக்குரிய சமரசங்கள்லேந்து தப்பிக்க முடியாது. அந்த மாதிரி சமரசத்தோட இறுதிவிளைவு இப்பிடி உள்ளீடில்லாமத்தான் இருக்கும்’ என்று என் இயல்புப் பேச்சுப்படி சொல்ல வாயைத் திறந்தவனுக்கு, அவ்வளவு பெரிய வார்த்தைகள் அவருக்குப் புரியாது என்று உறைத்தது. “டி.வி. ரிப்பேரு” என்றேன்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar