பிடித்த விளையாட்டு

in துண்டிலக்கியம்

பிடித்த விளையாட்டு: மனைவி வாணலியில் மும்முரமாக இருக்கும்போது அவரது உறவினர்கள் பற்றிப் பேச்சுக் கொடுப்பது. வாணலியில் இருப்பதைக் கிளறும்போது அவர் பார்வை திரும்பாது. அவர் சொற்பொழிந்துகொண்டிருப்பார். நான் சத்தமில்லாமல் விலகி என் மகனிடம் சென்று ‘உஷ்’ காட்டி அவனை என் இடத்தில் நிறுத்திவிட்டு ஒளிந்துகொண்டு பார்ப்பேன். சத்தத்தையே காணோமே என்று மனைவி திரும்பிப் பார்த்தால் என் மகன் இருப்பான். தாய் ஒரு கணம் குழம்பிப்போவார்.

முதன்முதலில் இந்த மாதிரி செய்தபோது என் மனைவி அலறிவிட்டார். “என்னங்க, என்னாச்சு உங்களுக்கு?” என்று என் மகன் மயக்கமடையும் வரை அவன் தோள்களைப் பிடித்து உலுக்கியெடுத்துவிட்டார்.

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar