பிஸியா?

in கட்டுரை

ஒரு பழைய நண்பரோடு செல்பேசியில் பேசினேன். நான் எழுத வந்த புதிதில் என்னைப் பாராட்டி ஊக்குவித்து எழுதவைத்தவர். அதற்குப் பின்பு அவர் என்னுடன் பேசவேயில்லை. யார் யாரையோ கேட்டு அவருடைய செல்பேசி எண்ணை வாங்கி அவரை அழைத்தேன்.

“வணக்கம் ரமேஷ்!”

“வணக்கம் சார் – ”

“பிஸியா?”

“இல்லீங் சார், சும்மா டி.வி. பாத்துட்ருக்கேன்.”

“ஓஹோ…”

“பாத்து எவ்ளோ நாளாச்சு!”

“இப்பவும் பாக்க முடியலியே! ஃபோன்ல இல்ல பேசிட்டிருக்கோம்!”

“உண்மைதான்.”

“பின்ன வேற எப்பிடி? இதுல இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாதுன்னு சொல்வாங்களே, அந்த மாதிரி…”

“ம்…”

“இதுல இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.”

“ஆமாமா…”

“நீங்க வேணா சுத்திமுத்திப் பாருங்க, நான் எங்கயாவது அக்கம்பக்கத்துல இருக்கனான்னு. எலும்புகூடக் கெடைக்காது!”

“ஓக்கே சார். சார், ஒரு அர்ஜன்ட் வேல. வெச்சிரவா சார்?”

“தாராளமா வைங்க, அப்புறமா எடுத்துக்-”

பேச்சை முடிப்பதற்குள் அழைப்பைத் துண்டித்துவிட்டார். நான்தான் தேவையில்லாமல் ஒரே விஷயத்தைப் பற்றிப் பேசி ‘அறுத்து’விட்டேனோ என்று வருத்தமாக இருந்தது. அந்த உரையாடல் இப்படிப் புரிதலுடன் நடந்திருக்க வேண்டும்:

“வணக்கம் ரமேஷ், நல்லா இருக்கீங்களா?”

“நல்லாருக்கேன் சார், நீங்க?”

“நான் நல்லாருக்கேன்… போரடிக்கிறனா?”

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar