நாவறு நிலை

in கட்டுரை

எண்ணிப் பார்த்தேன். 4503 வார்த்தை. ஆயாசமாக இருந்தது. சோம்பல் முறித்தேன். கைகளிரண்டையும் தொடைகளுக்கிடையே தொங்கப் போட்டுக்கொண்டு கணினித் திரையை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன்.

மனைவி வந்து என்னை இந்தக் கோலத்தில் கண்ணுற்றார். “என்ன இப்பிடி உக்காந்திருக்கீங்க? அண்ணாவுக்கு ஃபோன் பண்லயா?”

அண்ணா அவள் தம்பி. அண்ணாமலை. அவன் திருமண நாளுக்கு நான் அழைத்து வாழ்த்த வேண்டும்.

“அதான் ஈ-மெயில் எழுதி வெச்சிருக்கேன். இப்ப அனுப்பிடுவேன்” என்று கணினித் திரையைக் காட்டினேன்.

“ஈ-மெயிலா? ஒரு விசேசம்னா அழகா கூப்ட்டு பண்ணுவாங்களா, இல்ல பத்து பக்கம் கிறுக்கிட்டுக் கெடப்பாங்களா?”

“என்னவோ தெரியல, சோம்பலா இருக்குது. ஃபோன் பண்ணி வாழ்த்தணும்னா முதல்ல ஃபோனை எடுக்கணும், அதுல நம்பர எடுக்கணும், டயல் பண்ணணும், அவன் எடுக்குற வரைக்கும் வெயிட் பண்ணணும், வாயத் தொறக்கணும், ஹலோங்கணும், ஹாப்பிங்கணும், வெட்டிங்-கணும்…”

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar