@borehay

in துண்டிலக்கியம்

@borehay அடையாளங்களில் எனக்குப் பிரச்சினை இல்லை தோழர். அடையாளம் எந்தளவு தனிமனித இருப்பு சார்ந்ததோ அந்தளவு ஒரு சமூகம் சுயபுரிதலை நோக்கிக் கூட்டாக எடுத்துவைக்கும் அடியாகவும் உள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் புருவத்தைச் சுருக்கிக்கொண்டு, மூக்கு விடைக்க, கழுத்து நரம்புகள் புடைக்க, இல்லாத ஒரு ஜோடி விரைகளை வலதுகை பிடித்திருக்க, அடையாளம், அடையாளம் என்று சொல்கிறீர்களே, எந்த அளவுருக்களைக் கொண்டு அந்த அடையாளம் என்பதன் வரையறைக்கு நீங்கள் வந்தடைகிறீர்கள், ஓர் அடையாளத்தின் அகவய மற்றும் புறவய உட்கூறுகள் யாவை, அந்த உட்கூறுகளை நிர்ணயிக்கும் தேர்வளவைகள் யாவை, அந்த அளவைகளைக் கட்டமைக்கக்கூடிய ஆற்றல் உருக்கள் யாவை, எந்த ஓர் அடையாளத்தையும் முன்னெடுப்பதன் அல்லது மீட்டுருவாக்குவதன் இயங்கியலில் தொழிற்படும் படிநிலைகள் யாவை, இதற்கெல்லாம் என்ன அர்த்தம், இதற்கு எவ்வளவு செலவாகும்? அதுதான் என் பிரச்சினை.

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar