இரு கவிதைகள்

in கவிதை

அவரவர் கை வியர்வையை
ஆடையில் துடைத்துக்கொண்டு
மீண்டும் கைகோர்த்து நடந்தோம்.

*

பேசிப் பேசி
ஒரு முட்டுச்சந்துக்கு வந்திருந்தோம்
அலைகளின் சத்தம்
வசவு போல் ஒலித்தது
ஆனால் நமக்கு நம் மௌனம் இருந்தது

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar