இரு காதல் கவிதைகள்

in கவிதை

உன் குரலைக் கேட்ட குயில்
பாடலை நிறுத்திக்கொண்டு
பறந்துபோனது
பிஸியான குயில்.

*

மீன்களுக்குப் பொரி தூவிவிட்டுக்
குளத்துப் படிக்கட்டில் அமர்ந்து
மண்டபத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்
அசையாத நீரில் விழுந்த
ஒரு விந்துத் துளி போல்
படர்ந்த மலரைக் காட்டினேன்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar