ஏதாவது

in கவிதை

“உனக்கு ஏதாவது ஆகிவிட்டால்…”
“எனக்கு ஏதாவது ஆகிவிட்டால்…”
“இவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால்…”
அந்த ஏதாவதைச் சொல்ல
ஏன் பயந்து சாகிறீர்கள்?
பூடகமாக்கினால்
எதற்கு வந்தோம் எனக்
குழம்பி ஏறக் கட்டிவிடுமா
உங்கள் ஏதாவது?
“ஏதாவது ஒன்று ஆகிவிட்டால்”
என்று பதறாமல் சொல்லுங்கள்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar