பிரியும் தந்திரங்கள்

in கவிதை

நண்பர்கள் என்றால்
கொஞ்சம் கொஞ்சமாய்ப்
பேசுவதைக் குறைத்து
ஒருநாள் கழன்றுகொள்ளலாம்
காதலர்களிடமிருந்து பிரிவது எப்படி?
நண்பர்களாக இருக்க உறுதிபூண்டு
மெல்லமெல்லப் பிரியலாம்
மேற்கண்டவாறு.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar