மருந்துக்கும்

in கவிதை

என்ன வெயில்! என்ன வெயில்!
நிற்குமிடத்தில் மருந்துக்கும் நிழல் இல்லை
மருந்துகளை வெயில் படாமல்
வைத்திருக்கச் சொல்கிறார் மருத்துவர்
அவற்றைக் குழந்தைகளின் கைக்கு
எட்டும் இடத்திலும் வைப்பாயோ வெயிலே?

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar