லபக்குதாஸ் மகாபாரதம்

in துண்டிலக்கியம்

தொலைபேசியில்…

லபக்குதாஸ்: பேயோன், குட் நியூஸ். நானும் ஒரு வாட்டி மகாபாரதம் எழுதலாம்னு இருக்கேன்.

நான்: மகாபாரதமா? விளையாடுறீங்களா? ஜெயத்ரதன் மாதிரி சின்னதா ஒரு கிளைக்கதை எடுத்துக்கிட்டு எழுதுங்க!

லபக்குதாஸ்: ஏன்யா, ஆரம்பிக்கிறதுக்குள்ள சுவாகா சொல்றீங்க?

நான்: பெருசா இருக்கும்யா… ஆரம்ச்சிட்டு நிறுத்த முடியாம போயிரும்.

லபக்குதாஸ்: இல்ல’ல்ல. நூறே பக்கம். பீமன் சொல்ற மாதிரி முன்னாடியே எழுதிட்டாங்க. நான் நகுலன் பார்வைல எழுதப்போறேன்.

நான்: சரி, பாண்டவர்கள்ல கடைசி ஆளு யாரு? நகுலனா சகாதேவனா? எனக்கு எப்பவுமே அந்தக் கொழப்பம் உண்டு.

லபக்குதாஸ்: என்ன பேசிட்ருக்கீங்க? நான் நம்ம நகுலனைச் சொல்றேன்யா. கவிஞர் நகுலன். “ராமச்சந்திரனா, உள்ளேன் ஐயா” – அந்த நகுலன்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar