வலதுசாரி யார்?

in கவிதை

விஞ்ஞானிகளைவிட விஞ்ஞானம் அறிந்தவன்
தத்துவ அறிஞர்களைவிடத் தத்துவம் தெரிந்தவன்
கோட்பாட்டாளர்களைவிடக் கோட்பாடு தெரிந்தவன்
கணித நிபுணர்களைவிடக் கணிதம் அறிந்தவன்
வரலாற்றாளர்களைவிட வரலாறு தெரிந்தவன்
கலைஞர்களைவிடக் கலையறிவு கொண்டவன்
இலக்கியவாதிகளைவிட இலக்கியம் தெரிந்தவன்
ஆசிரியர்களைவிடப் பாடம் தெரிந்தவன்
மனிதாபிமானிகளைவிட மனிதாபிமானி
உரிமைப் போராளிகளைவிட உரிமைப் போராளி
தேசபக்தர்களைவிட தேசபக்தன்
பலசாலிகளைவிட பலசாலி
ஆன்மீகவாதிகளைவிட ஆன்மீகவாதி
ஆண்களைவிட ஆண், பெண்களைவிடப் பெண்
உன்னைவிட நீ, என்னைவிட நான், தன்னைவிட அவன்
வலதுசாரி.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar