அன்புக்கு

in கவிதை

தொடங்க வராத காதல் கடிதத்
தாளைப் போல், அன்பே,
வீசி எறிகிறாய் என்னை
நீ எறியும் இடமோ சிங்கப்பூர்!
பொது இடக் குப்பை போடல்
300 டாலர் கேட்கிறது
அபராதமாயேனும் என்னைக்
கட்டிக்கொள், அன்பே,
கட்டிக்கொள்!

Tags: , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar