கேரம்

in துண்டிலக்கியம்

நானும் லபக்குதாசும் என் வீட்டில் கேரம் விளையாடிக்கொண்டிருந்தோம். எப்போதாவது ஒரு மாறுதலுக்காக விளையாடுவோம். இருவருக்கும் கேரம் தெரியாது. ஆனால் செஸ்ஸும் தெரியாது. எனவே கேரம் நாணயங்களை வைத்து செஸ் போல் ஆடினோம். ஸ்ட்ரைக்கர்தான் வில்லன்.

கேரம் பலகையின் காம்பவுண்ட் சுவரில் வலதுகையை ஊன்றி வியூகத்தை யோசித்தபோது என் கண்களில் நீர் துளிர்த்தது.

“அட, என்னாச்சு திடீர்னு?” லபக்குதாஸ் கவலை தெரிவித்தார்.

“என் பொண்டாட்டி ஞாபகம் வந்துருச்சு.”

“உங்க பொண்டாட்டி பக்கத்து ரூம்லதான இருக்காங்க.”

“அதுனாலதான்.”

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar