அந்த மாதிரிப் பெண்

in கவிதை

அவனை அவள் ஏமாற்றிவிட்டாள்
அதனால் அவன் மனம் நொந்து
மும்பை போய்விட்டான் என்கிறார்கள்
ஏன், என்ன ஆயிற்று என்றால்
தெளிவான பதில் இல்லை
ரொம்ப அலைய விட்டாளாம்
அவனுடைய இம்சை தாங்காமல்தான்
அவனை விட்டுப் போனாள் என்று
நான் கேள்விப்படுகிறேன்
இரண்டும் நடந்திருக்கலாம்
ஒன்று மட்டும்கூட நடந்திருக்கலாம்
அவளை நீ பார்த்திருக்கிறாயா?
இல்லை
நான் பார்த்திருக்கிறேன்
அந்த மாதிரிப் பெண் யாரை வேண்டுமானாலும்
எத்தனை பேரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்
இந்த கௌரவம் புரியாதவர்கள்
அவளைக் காதலிக்க லாயக்கற்றவர்கள்.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar