காவிரியில் நான்

in துண்டிலக்கியம்

ஒருமுறை நான் காவிரியில் ஆனந்தமாகக் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்து நீர்மட்டம் உயர்ந்தது. அது அங்கே இங்கே ஓடாமல் எனக்கான சுனாமியாய் ஏவுகணை போல் என்னை நோக்கி வந்து அடித்து இழுத்துச் சென்றது. அது இரவு நேரம். கரையில் இருந்தவர்கள் அந்த மங்கிய ஒளியிலும் மூழ்கிக்கொண்டிருப்பது யார் என்று பார்க்க அபாயகரமான கூரைகளில், விளிம்புகளில் ஏறி நின்று சிரமப்பட்டார்கள். நீந்த வருகிறதா என்று கையைக் காலை ஆட்டிப் பார்க்க எனக்கு ஒரு பெரிய மரத் தண்டு தடையாக இருந்தது. அது தன்னை எனக்குச் சமமாகப் பாவித்து எனக்குத் துணைமை கொடுக்க முயல்வது போல் தெரிந்தது. எப்படியும் இருவரும் தத்தம் ‘ஸ்டாப்பிங்’ தேர்வுகளை மீறிக் கரையில் எங்காவது ஒதுக்கப்படுவோம் என்று அதற்குத் தெரிந்திருக்காது. அப்போது பார்த்து திடீரென்று வானில் ஒரு பயங்கர இடி இடித்தது. நான் பயத்தில் பாய்ந்து அந்த மரத் தண்டைக் கட்டிப்பிடித்துக்கொண்டேன். இல்லாவிட்டால் மூழ்கியிருப்பேன்!

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar