இரவுச் சாப்பாடு

in கவிதை

இரவு சாப்பிடும்போது மின்வெட்டு!
கண்களுக் கிருண்மை பழகுமுன்பான
தொரு முழுநிமிடக் காலத்தில்
காட்சியின்மையின் அளவிலா விசும்பினோர்
இடமற்ற மேடையில் மணமக்கள் போல்
அமர்ந்திருக்கிறோம் எதிரெதிரே
நானும் செட் தோசையும்.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar