ஒரு காக்கை

in கவிதை

அமைதியான ஞாயிறு காலை
தெருவில் அசையாமல் கிடக்கும்
கருப்பு பாலித்தீன் உறையை
ஒரு காக்கை யோசித்து
யோசித்துக் கொத்துகிறது
வேண்டிய ஆளா எனப் பார்க்கிறதா
இரையா என்று ஆராய்கிறதா?

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar