நான் எப்போதுமே நினைப்பதுண்டு

in கவிதை

– லியோபோல்டு ஜோரோஸ்
தமிழில்: பேயோன்

நான் எப்போதுமே நினைப்பதுண்டு
ஏதேனும் ஒரு சிந்தனையை

அந்தச் சிந்தனை வழக்கமாக இருக்கும்,
காலையில் உண்ட உணவைப் பற்றியதாக
ஒரு பழைய காதலியின் உதடுகள் பற்றியதாக
ஒரு வீண் காத்திருப்பின்போது தவற விட்ட
ஒரு வாய்ப்பைப் பற்றியதாக
முன்பொரு நாள் புணர முயன்ற
ஒரு பெரிய பழைய சாவித் துவாரம் பற்றியதாக

நம் சிந்தனைகள் கடந்தகாலத்தில்
ஊறியிருக்கும்போது
அவை சொதசொத என்று ஆகின்றன
அவை நினைவுகளாகின்றன

நான் எதிர்காலத்தைப் பற்றி
ஒருபோதும் சிந்திப்பதில்லை
என் மனக்கண் அதை நோக்குவதில்லை
இதுவரை அது ஒரு
பிரச்சினை ஆனதில்லை
ஏனெனில் எதிர்காலத்தில் இருந்தபடிதான்
கடந்தகாலத்தை நான் பார்க்கிறேன்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar