அன்புக் கண்ணாடி

in கவிதை

மாக்ஸி சைஸ் எனப்படும் அளவில்
என் படம் ஒன்றைச் சட்டமிட்டு
சுவரில் மாட்டியுள்ளேன்
பாஸ்போர்ட் புகைப்படத்தைப்
பெரிதாக்கியது போலிருக்கும்
அதில் நான் அழகாக இருக்கிறேன்
மற்றவர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள்
எடுப்பான புருவம், கச்சிதமான மீசை
புதுச் சவரத்தின் பொலிவு
உரிய இடத்தில் விபூதிக் கீற்று
தினமும் இதன் முகத்தில் விழிப்பது
நிறைவை அளிக்கிறது
சவரம் செய்ய, விபூதி ஏற்ற,
மீசை முறுக்க, பவுடர் பூச,
சும்மா என்னைப் பார்த்துக்கொள்ள,
பிரதிபலிப்பு குறுக்கிட்டுக் குழப்பினாலும்
என் உருவப்படமே என் கண்ணாடி.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar