லிஃப்ட் ஆபரேட்டர்

in கவிதை

நிறுத்திவைத்த ஃப்ரீசர் சவப்பெட்டி
போன்ற பளபள எவர்சில்வர் லிஃப்ட்டில்
முக்கால்வாசி இடத்தை
ஆபரேட்டரே விழுங்கிக்கொள்கிறார்
நாங்கள் நுழைந்திட வழியின்றி.
எட்டுத் தளங்களுக்கு எங்கும் நில்லாது
கதவுகளைத் திறந்து மூடத் தவமிராது
யார் தொந்தரவும் சிறிதும் இல்லாது
மின்னணுப் பொத்தான்களை அழுத்திச் சலிக்காது
ஒரு பறக்கும் விளக்கின் சுடர் போல
எட்டாம் மாடியிலிருந்து பி1 தளம் வரை
தான் மட்டும் ஜாலியாகச் சென்றுவர
நாங்கள் அவரை வழியனுப்புகிறோம்
டாட்டா ஏதும் சொல்லாமல்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar