மின்விசிறி

in கவிதை

1.

தேமே என ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி
ஒட்டடை அடிக்கப்பட்ட பின்
சத்தம் போடத் தொடங்கியிருக்கிறது
அணைக்கப்பட்டு அடங்கும் மின்விசிறி
மெல்லக் கடகடத்து ஓய்கிறது
படிப்படியாக நிற்கும் மூச்சு போல.

2.

ஏர்கண்டிஷனர், வாஷிங் மெஷின், மிக்சி,
சமயத்தில் கணினியின் வன்தட்டுகூடத்
தத்தம் மொழியில் சத்தம் போடுகின்றன
பழைய மின்விசிறிகளிடம்தான்
சொல்ல ஏதாவது இருக்கிறது.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar