ஏற்ற இறக்கம்

in கவிதை

பாடையைப் போல் இருக்கிறது ஏணி
யைப் போல் இருக்கிறது பாடை

ஏணியைச் சாய்த்து ஏறலாம், இறங்கலாம்
ஸ்ட்ரெட்ச்சரில் சறுக்குமரம் ஆடலாம்

சறுக்குமரத்தில் ஏற ஏணி வேண்டும்
பாடை போல் இருக்கிறது ஏணி.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar