எல்லாம் விதி

in கவிதை

‘வருகிறேன்’ என்றாள் அவள்
கதவைத் திறந்தபடி
‘ம்’ என்றாள் இவள்
பார்வை திரும்பாமல்
செருப்பின் வாரை
மாட்டிக்கொண்டவள் இறுதியாக
‘வருகிறேன்’ என்றாள்
‘எத்தனை முறைதான் சொல்வாய்?’
என்று இவள் பொரிந்தாள்
பிறகு தகவல் வந்தது
அவள் விபத்தில் இறந்துவிட்டாள் என
இவள் அழுது புலம்பினாள்
‘வராமலே போய்விடுவாய்
என்று தெரிந்திருந்தால்
இன்னொரு முறை
சொல்ல விட்டிருப்பேனே!’

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar