திருவிழா

in துண்டிலக்கியம்

லபக்குதாசுக்குத் தாம் பேச மற்றவர்கள் கேட்பது என்றால் கரும்பு. ஆனால் நாம் பேச ஆரம்பித்தால் இசைப்பாட்டும் இளக்காரப் பேச்சுமாக நம் உரையாடலின் தலையைக் கலைத்து விடப் பார்ப்பார்.

காலையில் அவருடன் தேநீர் அருந்தியபோது ஒரு பழைய நினைவைக் கிளற முயன்றேன். டீ சாப்பிடும்போது கலகலப்பாக ஏதாவது பேச வேண்டும் அல்லவா?

“ஒருநாள் எங்க ஊர் திருவிழால காணாம போனீங்களே, ஞாபகம் இருக்கா? நான், என் உறவுக்காரங்க எல்லாம் ரெண்டு மணிநேரம் தேடிப் பாத்தா எங்கியோ ஒரு பெஞ்ச்சுல உக்காந்து திருதிருன்னு முழிச்சிட்டிருந்தீங்க…”

பாதியிலேயே குறுக்கிட்டார் லபக்குதாஸ். “யூ லாஸ்ட் மீ அட் திருவிழா.”

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar