ஐந்து குறுங்கவிதைகள்

in கவிதை

உனக்காகச் சாத்திவைத்த
இந்தக் கதவைத்
தட்டாமலே போகிறாய்.

*

இல்லாத கல்லறையில்
எவ்வளவுதான் புரளுவேன்?

*

அம்பி, இந்தத்
தகர டப்பியில் இருப்பது
கங்கா ஜலமா
ஸ்வாமி பஸ்பமா?

*

இறந்த பின்பு என்னைக்
கண்ணாடியில் பார்க்கிறேன்
இப்படி ஒருவன் இருந்தேன் என்றும்
இப்படி ஒருவன் இல்லை என்றும்
நம்ப முடியவில்லை.

*

பல முறை நானும் இறப்பதுண்டு
ஒவ்வொருவர் மரணமும்
என் மரணம் ஆகும்போது

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar