பேயோன்
படித்ததில் பிடித்தவன்
Category Archives: பிற
ஓர் அறிவிப்பு
நாளை காலை இந்திய நேரத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட இருக்கிறேன். அந்த அறிவிப்பு குறித்த விவரங்கள் அதிலேயே இருக்கும்.
தொகுப்பில் ஒரு பக்கம்
வெள்ளைத் தாளில்
கீழ் இடது மூலையில்
நான்கு வரிகள்
கவிதை
முடிந்து தொடங்கும் கவிதை
பயணம் முடிந்த பின்னும்
தொடர்ந்து நடக்கும் கால்களை
பின்தொடர்கின்றன கண்கள்
முடிந்துவிட்டது பயணம்
தொடர்ந்து நடக்கும் கால்கள்
பின்தொடரும் கண்கள்
பின்தொடர்கின்றன கண்கள்
தொடர்ந்து நடக்கும் கால்களை
பயணம் முடிந்த பின்னும்
பயணம் முடிந்துவிட்டது
கால்கள் நடக்கும் தொடர்ந்து
கண்கள் பின்தொடரும்
