‘கிறதுன்’ கவிதை

உப்புப் போடாத
எண்ணெய் சொட்டுகிற
பிரெட் பஜ்ஜியை

ருசியற்ற சட்னியில்
தோய்த்து வாய்க்குள்
இடும்போது
கவிகிறதுன் தனிமை.

விட்டில்காரி

உன் ஒவ்வொரு வார்த்தையின்
ஒவ்வொரு எழுத்தும்
என் மனதினுள் மழைத்துளியாய்…!

உன் ஒவ்வொரு பார்வையின்
ஒவ்வொரு வீச்சும்
என் இதயத்தில் நிலவொளிக் கதிராய்…!

உனை மறக்க
வழியேது…?

காணும் பெண்களுள் குடிபுகுந்தாய்
மாற்றாள் சேலையில் மெல்லசைந்தாய்

காற்றில் கலந்து எனை அசைத்தாய்
மழையில் நுழைந்து எனை நனைத்தாய்

என்னை எரித்து எரித்து ஒளிரும் நீ
அட விட்டில்காரி…!